கைலாசா தீவின் ஜனாதிபதி சாமி நித்தியானந்தாவின் அதிரடி அறிவிப்பு..!! பேரதிர்ச்சியில் இந்தியர்கள்.!

இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து கைலாசாவிற்கு வரும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என நித்தியானந்தா அறிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய நித்தியானந்தா, இந்தியாவில் இருந்து தப்பியோடி தனித்தீவு ஒன்றை வாங்கி அங்கு குடியேறியதாகவும் கைலாசாவை தனி நாடாகவும் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து அவ்வப்போது சில வீடியோக்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்பத்தி வருகிறார்.இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், நித்யானந்தா பெயரில் அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில், கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வேகமெடுத்துள்ளதால், இந்தியாவிலிருந்து வரும் பக்தர்கள் கைலாசாவிற்குள் நுழைய அனுமதி இல்லை.அத்துடன், ஐரோப்பிய யூனியன், மலேசியா, பிரேசில் என கொரோனா பரவல் அதிகம் உள்ள நாடுகளிலில் இருந்து பக்தர்கள் கைலாசா நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.