தற்போது கிடைத்த செய்தி..இலங்கையில் கொரோனாவினால் மேலும் ஐந்து பேர் பலி..!!

இலங்கையில் மேலும் 5 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 630ஆக உயர்ந்துள்ளது.

எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த 75 வயதைக்கொண்ட ஆண் ஒருவர், கொழும்பு வடக்கைச் சேர்ந்த 80 வயதான ஆண் ஒருவர், களனியைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர், இரத்தினபுரியைச் சேர்ந்த 66 வயதான ஆண் ஒருவர், கம்பஹாவைச் சேர்ந்த 39 வயதைக்கொண்ட ஆண் ஒருவர் ஆகியோரே கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய,இலங்கையில் மேலும் 155 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இவர்கள் அனைவரும் ஏற்கனவே கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.