இலங்கையில் கோவிட் தடுப்பூசி பெற்ற மூன்று பேர் இரத்த உறைவுவினால் மரணம்!! உறுதிப்படுத்தினார் அமைச்சர் பவித்திரா.!!

இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் மூன்று பேர் இரத்த உறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். எனினும், அவர்களின் மரணத்திற்கு தடுப்பூசி காரணமல்லவென்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது என்றார். தடுப்பூசியினால் இரத்தம் உறைதல் அச்சம் தொடர்பாக சில நாடுகளால் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், உலக சுகாதார அமைப்பு (WHO) அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைத் தொடர அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
தடுப்பூசி பெற்ற பின்னர் இரத்த உறைவால் பாதிக்கப்பட்ட ஆறு பேரில் அவர்களும் அடங்குவதாக அமைச்சர் வன்னியராச்சி தெரிவித்தார்.இவர்கள் தடுப்பூசியினால் இரத்த உறைவினால் பாதிக்கப்படவில்லையென்பதை, இது தொடர்பில் ஆராய்ந்த உலக சுகாதார அமைப்பின் சுகாதார வல்லுநர்கள் தீர்மானித்துள்ளனர் என்றார்.தடுப்பூசி செலுத்தப்படும் ஒரு மில்லியன் பேரில் 4-5 பேர் இரத்தம் உறைவினால் இறப்பது தவிர்க்க முடியாதது என்று அவர்கள் மேலும் அறிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், தடுப்பூசியின் பாதுகாப்பை WHO உறுதி செய்துள்ளதாகவும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தொடர அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.இலங்கையில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெறுவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு சுகாதார விளக்கத்தை வழங்குவதாக அவர் மேலும் கூறினார்.தடுப்பூசி பெற்ற பிறகு மக்கள் ஏதேனும் அசௌகரியம் அல்லது பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டால், அது தொடர்பில் தகவல் தெரிவிக்க ஒரு சிறப்பு ஹொட்லைன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.0112 3415989 என்ற எண்ணில் சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில், தடுப்பூசி காரணமாக பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுபவர்களுக்காக சிறப்பு மருத்துவர்களைக் கொண்ட ஒரு சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்ற நான்கு நாட்களுக்குப் பிறகு தொண்டை வலி, சுவாசக் கோளாறு அல்லது கால் வலி போன்றவற்றால் யாராவது பாதிக்கப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சர் பாராளுமன்றத்திற்கு விளக்கமளித்தார்.
தடுப்பூசி வழங்குவதை அரசாங்கம் இடைநிறுத்தவில்லை என்று கூறிய அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி, இரண்டாவது டோஸ் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன என்றார்.முதல் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பெற்றவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி மே முதல் வாரத்தில் தொடங்கும் என்று அவர் கூறினார்.தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்புவதைத் தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொண்டார்.ஏனெனில், இது தடுப்பூசி செயல்முறை குறித்த பொதுமக்களின் நம்பிக்கையை பாதிக்கும் என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுடன் தொடர்புடைய நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்புவதற்கு முன்னர் அவர்களின் உண்மைகளை சரிபார்க்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொறுப்பான பொது பிரதிநிதிகளாக அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கேட்டுக் கொண்டார்.