இரு பிள்ளைகளை வெட்டிக் கொலை செய்த ஈழத்தமிழரான கொடூரத் தந்தை அதிரடியாகக் கைது.!!

கடந்த ஞாயிறு மாலை இல்பேட்டில், வீட்டில் வைத்து தனது 2 பிள்ளைகளையும் கொலை செய்து தானும் தற்கொலைக்கு முயன்ற நித்தின் குமார் கண் விழித்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் சற்று முன் அறிவித்துள்ளார்கள். இதனை அடுத்து அங்கே சென்ற புலனாய்வு பொலிஸ் அதிகாரியான, (Vicky Tunstall) விக்கி டன்ஸ்டால் , அவரை கைது செய்து காவலில் வைக்க உத்தரவிட்டார். அவர் நித்தின் குமாரை விசாரணை செய்து வருகிறார். இன் நிலையில் யாருக்காவது அங்கே என்ன நடந்தது என்று தெரிந்தால் உடனே இல்பேட் பொலிசாரை தொடர்பு கொள்ளுமாறு அவர் பொது மக்களுக்கும், குறிப்பாக தமிழர்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏன் எனில், உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக அறிய, தாம் முழு விசாரணையில் ஈடுபட உள்ளதாக விக்கி டன்ஸ்டால் தெரிவித்துள்ளார். இறந்து போன நிகிஷி மற்றும் பாபினையா ஆகிய 2 குழந்தைகள் மிகவும் பரிதாபமானவர்கள் என்றும், இச்சம்பவம் அயலவர்களை பெரிதும் கவலை கொள்ள வைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். எனவே, உண்மை நிலை தெரிந்தவர்கள் இல்பேட் பொலிசாரை தொடர்பு கொண்டு, தகவல்களை வழங்கலாம் என்றும் விக்கி டன்ஸ்டால்  கேட்டுக் கொண்டுள்ளார்.