ஈழத்துக் கலைஞர்களின் இன்னுமொரு அற்புதமான படைப்பு!! இணையத்தில் வேகமாக வைரலாகும் பாடல்!! குவியும் பாராட்டுக்கள்!

வாழ்வின் எல்லா அம்சங்களும் ரசனையினால் தான் உருவாக்கப்படுகின்றது.குறிப்பாக, கலையை ரசிக்கத் தெரிந்தவன் தான் பெரும் கலைஞன் ஆகின்றான்.

ஈழத்தைப் பொறுத்த வரையில்,கலையை ஒருவனின் திறமையை மக்கள் மத்தியில் சரியாக கொண்டு சென்று சேர்ப்பதே பெரும் சிக்கலாகத் தான் இருக்கின்றது. காரணம், இந்திய சினிமாவும் அதன் வளர்ச்சியும் தான் என இலகுவாகச் சொல்லிவிட முடியும்.இங்கு தயாரிக்கப்படும் ஒவ்வொரு படைப்புக்களையும் இந்திய சினிமாவோடு ஒப்பிட்டுப் பேசுவது வழக்கமாகியிருக்கின்றது. ஆனால், எவ்வளவோ திறமைகள் இருந்தும்இஎத்தனையோ புதிய சிந்தனைகளினால் சிறந்த படைப்புக்களை உருவாக்கியிருந்தும் எம்மவர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பது என்பது மிகவும் குறைவு தான்.அந்த ஒப்பீடுகளுக்கும்,விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் விதமாக உருவாகியிருப்பது தான் இந்தப் புதிய படைப்பு. ஆம், பட்டி தொட்டி எங்கும் தற்பொழுது முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி பாடலின் ஈழத்துப் படைப்பு தற்போது வெளியாகியுள்ளது.சமூகவலைத்தளத்தில் வைரலாகும் இந்தப் பாடலுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைக் கூறி வருகின்றனர்.பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன் இசையமைத்துள்ள குக்கூ பாடலை வளர்ந்து வரும்பின்னணிப் பாடகர் அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் வளர்ப்பு மகளான பாடகி தீ அவர்கள் பாடியிருந்தார்.இந்நிலையில், இதே பாடலை இலங்கைக் களைஞர்கள் தமது சொந்தப் படைப்பாக தயாரித்து வெளியிட்டுள்ளனர்.கடந்த மாதம் இந்தியக் கலைஞர்களின் உருவாக்கத்தில் வெளியாகி, உலகெங்கும் பிரபல்யமாகிய பாடல் ‘எஞ்ஜோய் எஞ்சாமி’ப் பாடலை எம் ஈழத்துக் கலைஞர்கள் மீள் உருவாக்கம் செய்திருக்கிறார்கள்.இந்தப் பாடலின் தயாரிப்பானது,அதிக தொழினுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டது. அதே போன்றதொரு, தயாரிப்பை, யாழ்ப்பாணத்தில் உருவாக்கி இருக்கும் கலைஞர்களுக்கு நிச்சயமாக நாம், எமது ஆதரவை வழங்க வேண்டும்.இணையத்தில் வேகமாக வைரலாகி வரும் இந்த எஞ்ஜோய் எஞ்சாமி பாடலைப் பார்த்துவிட்டு, உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

எஞ்ஜோய் எஞ்சாமிப் பாடலை பார்த்து மகிழ இந்த இணைப்பில் அழுத்துங்கள்..