இலங்கையை உலுப்பிய கோர வீதி விபத்துக்கள்..கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 06 பேர் பலி..!!

கடந்த 24 மணிநேரத்தில் வீதி விபத்துக்களுடன் தொடர்புடைய 6 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் இன்று காலை தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மூவர் மோட்டார் சைக்கிள் சாரதிகள் எனவும், மற்றைய மூவர் பாதசாரிகள் என்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
வாகன விபத்துகளின் விளைவாக, ஏப்ரல் 13 முதல் இதுவரை 75 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதுடன், சுமார் ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இதேவேளை மதுபோதை மற்றும் பொறுப்பற்ற ரீதியில் வாகனம் செலுத்துவோரை அடையாளம் காண, பொலிஸார் சிறப்பு நடவடிக்கை எடுத்து வருவதுடன், வீதிப் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.