கொரோனாவால் ஏற்பட்ட முதலாவது மரணம் மாலைத்தீவில் பதிவு..!!

மாலைத்தீவில் முதலாவது கொரோனா வைரஸ் மரணம் பதிவாகியுள்ளது.

83 வயதான வயோதிப பெண்ணொருவரே இவ்வாறு தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் இவ்வாறு பலியாகியுள்ளார்.மாலைத்தீவில் இதுவரை 280 பேர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் 17 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்