இணையத்தின் மூலம் சமூகத்தில் போலிப் பிரச்சாரங்களைத் தடுக்க வருகிறது புதிய சட்டம்!! அமைச்சரவையும் அனுமதி..!!

இணையதளத்தின் ஊடாக பொய்யானதும் திசை திருப்புவதுமான செயல்களுக்கெதிரான சட்ட மூலத்தைத் தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இணையத்தளம் வழியாக பொய்யான தகவல்கள் தவறாக வழிநடத்தப்படும் கருத்துக்கள் பரப்பப்படுவதை தடுக்க புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், இப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காகப் பல நாடுகள் சட்டங்களை வகுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.இதற்கான சட்ட வரைவை உருவாக்குமாறு சட்டவாக்க சபையினருக்கு ஆலோசனை வழங்க முன்வைக்கப்பட்ட யோசனைக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.அத்தோடு இணையத்தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் பொய் பிரசாரங்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சமூகத்தைப் பாதுகாத்து, பிரஜைகளுக்கும் சிவில் சமூகத்தினருக்கும் சரியான தகவல்களைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும், இந்த பணிக்கான சட்ட மூலத்தைத் தயாரிக்க, சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு நீதி அமைச்சரும், வெகுசன ஊடக அமைச்சரும் இணைந்து சமர்ப்பித்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் உட்பட இணையத்தளங்களில் பொய்யான பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்களை தவறாக வழிநடத்தும் கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.