தற்போது கிடைத்த விசேட செய்தி..வடக்கில் இன்று 15 பேருக்கு கொரோனா..!!

இன்று வட மாகாணத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இன்று வடமாகாணத்தில் 643 பேருக்கு COVID -19 பரிசோதனை செய்யப்பட்டது.இதில், 15பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 07 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.