அனைத்து மேதினக் கூட்டங்களும் ரத்து!! இராணுவத் தளபதியின் அறிவிப்பு..!

மே தினக் கூட்டங்களை இணைந்து நடாத்துவதா? பிரிந்து நடத்துவதா? என சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில் சகல மே தின கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று (ஏப்ரல் 19) அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.இது குறித்து இராணுவ தளபதியும், தேசிய கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா கூறியிருக்கின்றார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில்,கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முகமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும், இந்த தீர்மானத்திற்கு சகல அரசியல் கட்சிகளும் ஒப்புதல் தொிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். கொவிட் -19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய செயலணி மையத்தில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.