கொலையாக மாறிய குடும்ப வன்முறை..யாழ். வடமராட்சியில் இன்று நடந்த பயங்கரம்..!!

பருத்தித்துறையில் குடும்ப பிணக்கு வன்முறையாக மாறியமையினால் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


அல்வாய் பகுதியில் உறவினர்களுக்கு இடையில் காசு கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பெரும் வன்முறையாக மாறியுள்ளது. இச்சம்பவம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
குடும்பஸ்தர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வன்முறை சம்பவத்தில் அல்வாயை பகுதியை சேர்ந்த சேர்ந்த 31 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான மு. கௌசிகன் கொல்லப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.