கொரோனா தடுப்பு பணியிலிருந்து விலகவுள்ள அரசாங்க மருத்துவர்கள்…!! அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள அவசரக் கோரிக்கை..!

இலங்கையில் கோவிட் 19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் முன்னணி சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பிற அரச அலுவலர்களுக்கான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தனது கவலையை தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாத காரணத்தால் சி.எம்.சி மத்திய கொழும்பு பிரிவைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் குழு பணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.கோவிட் 19 செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.