யாழ். மன்னார் வீதியில் இன்று அதிகாலை நடந்த பெரும் தேடுதல்..வசமாகச் சிக்கிய பெரும்தொகை கேரளக் கஞ்சா..!!

பூநகரி பள்ளிக்குடா பகுதியில் இன்று அதிகாலை விசேட அதிரடிப்படையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதலில் பெருமளவு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.யாழ் மன்னார் வீதிக்கு அண்மித்த பகுதியில் உள்ள பற்றை ஒன்றில் இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருந்த பொதிகளை இன்று அதிகாலை சோதனையிட்ட போதே இவை மீட்கப்பட்டுள்ளன.மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் சுமார் 150 கிலோ எடையை உடையதாக இருக்கும் என நம்பப்படுகிறது. மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ள நிலையில், விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளிற்காகவும், நடவடிக்கைக்காகவும் பூநகரி பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும்,மேலதிக விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.