கொரோனா தொற்றினால் இலங்கைத் தூதுரகத்திற்கு தற்காலிக பூட்டு..!!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பணியாளர்கள் சிலர் கோவிட் நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் முதல் மறு அறிவித்தல் வரையில் உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தனிமைப்படுத்தல் நோக்கில் இவ்வாறு உயர்ஸ்தானிகராலயம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அவசர தேவைகளுக்காக +91-11-23010201 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது என்ற மின்னஞ்சல் முகவரியுடனோ தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இன்று முதல் டெல்லியில் முடக்க நிலையை மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.