கொரோனா குறைந்து எல்லைகள் திறந்தன..கட்டியணைத்து மகிழும் இரு நாட்டு மக்கள்..!!

ஒரு வருடத்திற்குப் பிறகு எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவும் தங்கள் எல்லையைத் திறந்துள்ளன.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “ கொரோனா பாதிப்பு நியூசிலாந்து, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் குறைந்துவிட்டது.இதனைத்தொடர்ந்து இரு நாடுகளிலும் எந்த கட்டுப்பாடுகளின்றி எல்லைகள் திறக்கப்பட்டுள்ளன. தனிமைப்படுத்துதல் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் விமான நிலையங்களில் இரு நாட்டை சேர்ந்தவர்களும் கண்ணீருடன் கட்டி தழுவி அணைக்கும் காட்சிகள் நிரம்பி வழிகின்றன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.முன்னதாக 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்ததைத் தொடர்ந்து நியூசிலாந்து – அவுஸ்திரேலியா எல்லைகள் கட்டுப்பாடுகளுடன் மூடப்பட்டன.கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நாடுகளில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முனைப்பு காட்டி வருகின்றன.உலகம் முழுவதும் சுமார் 13 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.