இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை தொடர்பில் இன்று வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு..!!

இரண்டாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை ஒரு வாரத்திற்கு மட்டுப்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.இந்த விடயத்தை கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கும் போது;கோவிட் நோய்த் தொற்று காரணமாக பாடசாலை நாட்கள் குறைவடைந்துள்ளன.இந்த நிலையில், இதனை ஈடு செய்யும் நோக்கில், பாடசாலை விடுமுறையை வரையறுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.எனவே, ஆகஸ்ட் மாதம் ஒரு வார காலம் மட்டும் பாடசாலை விடுமுறை வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.