ஊரடங்கு நேரத்தில் வீட்டிலிருந்து தேடப்ப்பட்ட சுவை மிகுந்த உணவுகளின் பட்டியல்…!! சற்று முன் வெளியிட்டது கூகுள்..!!

தற்போது உலகை ஆட்டிப்படைக்கிறது கொரோனா எனும் அரக்கன்.இதனால் பல நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தியுள்ளன.இதனால் பலர் வீட்டிலேயே முடங்கிகிடக்கின்றனர். இந்த நிலையில், எந்த ஸ்நாக்ஸ்களை வீட்டிலேயே சமைக்கலாம் என்று அதிகம் பேர் தேடிய பட்டியலை கூகுள் வெளியிட்டுள்ளது.குவாரண்டைன் ஸ்நாக்ஸ் என்பதைத் தான் அதிகம்பேர் கூகுளில் தேடியுள்ளனர். இதில் நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா நாட்டினரே அதிகமென தெரிவிக்கப்பட்டுள்ளது.வாழைப்பழ பிரட்டை மைக்ரோவேவ் அவனில் வைத்து கேக் செய்வதுதான் அதிகம்பேரின் தேர்வாக இருந்துள்ளது.சொக்லேட் கேக்குகள், கரட் கேக் மற்றும் பிரபலமான டல்கோனா காப்பி ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. வீட்டிலேயே ஃபிரைட் ரைஸ் செய்வது எப்படி என்பதை தேடித் தேடி பலர் சமைத்துள்ளனர்.

குடும்பத்துடன் சாப்பிடும் இரவுநேர உணவுகளையும் பலர் தேடியுள்ளனர் என்கிறது கூகுள்