கொரோனாவின் கோரத் தாண்டவத்தினால் இலங்கையில் தொழில்களை இழந்த 2 லட்சம் தனியார் துறை ஊழியர்கள்..!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இரண்டு லட்சம் தனியார் துறை பணியாளர்கள் தொழில்களை இழந்துள்ளதாக தெரியவருகிறது. ஜே.வி.பி.யின் முன்னாள் மாகாணசபை உறுப்பினரும், தொழிற்சங்க செயற்பாட்டாளருமான வசந்த சமரசிங்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.இந்த எண்ணிக்கை எதிர்வரும் வாரங்களில் 10 முதல் 15 லட்சத்தால் உயர்வடையக் கூடிய சாத்தியங்கள் உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார்.பிணை முறிகளை வெளியீடு செய்து 300 பில்லியன் ரூபாவினை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் தனியார் துறை பணியாளர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் தனியார்துறை பணியாளர்களின் ஊழியர் சேமலாப நிதியில் 50 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நாடு முழுவதிலும் உள்ள கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள் இவ்வாறான நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாக வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.