காரில் கடத்தப்பட்ட 50 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் பெறுமதி வாய்ந்த ஹெரோயினுடன் பெண் உட்பட இருவர் அதிரடியாகக் கைது..!!

தலங்கமை ஹினடிகும்புர பிரதேசத்தில் 50 லட்சம் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளை காரில் கடத்திச் சென்ற பெண் மற்றும் ஆண் ஒருவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.


சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் போதைப் பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.இந்த ஹெரோயின் போதைப் பொருள் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல்காறரான , தற்போது துபாய் நாட்டில் தலைமறைவாக இருக்கும் களு சாகர என்ற நபருடன் இருக்கும் பெண்ணுக்குச் சொந்தமானது என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள், நோனாகம மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 33 வயதான நபர்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.