மிக விரைவில் உயர்தர பெறுபேறு!

நடைபெற்று முடிந்த க. பொ. த. உயர் தர பரீட்சை பெறுபேறுகளை இந்த மாத இறுதியில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.


அத்துடன், பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டு, மூன்று மாத காலப் பகுதிக்குள் பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரு தெரிவித்துள்ளார்.

பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.