மறைந்த பிரபல நடிகர் விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை..தமிழக அரசின் அறிவிப்பு..!!

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்கின் உடலுக்குக் காவல்துறை மரியாதை அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.


விவேக்கின் பூதலுடல் இன்று (சனிக்கிழமை) மாலை விருகம்பாக்கத்தில் மின் தகன டேடையில் தகனம் செய்யப்படவுள்ள நிலையில் தமிழக அரசு இந்த அரசாணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டு மக்கள் அனைவரது மனங்களிலம் நீங்காத இடம்பிடித்துள்ள விவேக்கின் புகழுக்குப் பெருமை சேர்க்கும் வகையிலும், அவரின் கலை மற்றும் சமூகச் சேவைக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் அன்னாரின் இறுதிச் சடங்கின்போது காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்வதற்கு அரசு ஆணையிட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் விவேக், மாரடைப்பால் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், விவேக்கின் மறைவுக்குத் திரையுலகினரும் அரசியல் பிரமுகர்களும் இரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.