யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கான மிக முக்கிய அறிவிப்பு..பீ.சி.ஆர் பரிசோதனைகள் ஆரம்பம்..!!

யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த வாத்தகர்கள் மற்றும் வர்த்தக நிலைய பணியாளர்கள் இன்று நடைபெறும் பீ.சி.ஆர் பரிசோதனையில் தவறாது கலந்து கொள்ளுமாறு யாழ்.வணிகர்கழகம் தொிவித்துள்ளது.
பீ.சி.ஆர் முடிவு அறிக்கை வைத்திருக்காதவர்கள் யாழ்.மாநகரில் வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதுடன்,கொரோனா தொற்றுக்குள்ளான வர்த்தகர்களும் வர்த்தக நிலையங்களை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்களுக்கு பீ.சி.ஆர் பரிசோதனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.மேலும், இதுவே முடக்கப்பட்ட பகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இறுதி பரிசோதனையாகும்.சுகாதாரப் பிரிவினர் வர்த்தக நிலையங்களுக்கு கள விஜயம் மேற்கொள்ளும்போது யாராவது PCR செய்யாமல் வர்த்தக நிலையங்களில் பணிபுரிந்தால், அதற்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் சுகாதாரப் பிரிவினர் குறிப்பிட்டுள்ளனர்.