யாழில் ஒருவர் உட்பட இலங்கையில் மேலும் 7 கொரோனா மரணங்கள்!!

இன்று மேலும் ஏழு கொரோனா மரணங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.இதன்படி, நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 615 ஆக அதிகரித்துள்ளது. இன்று அறிவிக்கப்பட்ட உயிரிழப்புகளில் இரண்டு பெண்கள் மற்றும் ஐந்து ஆண்களும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சாவகச்சேரியைச் சேர்ந்த 59 வயது பெண்ணும், கலாவனவைச் சேர்ந்த 75 வயது பெண்ணும் உயிரிழந்தனர்.கல்முனையைச் சேர்ந்த 60 வயது ஆண், தொண்டமானாறை சேர்ந்த 63 வயது ஆண், பஸ்யாலவைச் சேர்ந்த 69 வயது ஆண், இரத்தினபுரியை சேர்ந்த 76 வயதான ஆண், தலங்கமவைச் சேர்ந்த 86 வயதான ஆண் உயிரிழந்தனர்.