அர்த்தமுள்ள நகைச்சுவையினால் லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை கொண்ட சின்னக் கலைவாணர்..ஈழத்திலிருந்து ஒரு இரங்கல்

சின்னக் கலைவாணர் என்று சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்த 61 வயதான விவேக் நகைச்சுவை நடிகர் இன்று காலமானார். பல பேரை #சிரிக்க #சிந்திக்க வைத்த #சின்னகலைவாணன் இதயம் இன்று பல பேரை சிந்திக்க மட்டும் வைத்துவிட்டது.

1961 நவம்பர் 19ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மகனாக மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி – இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய உலகெங்கும் வாழும் ஈழத்து மக்கள் சார்பாக ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கைப் போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். தமிழ் திரைத்துறையில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகாலம் நகைச்சுவை ஜாம்பவானாக வலம் வந்தார் விவேக்.சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.இந்திய அரசு வழங்கும் 2009ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார்.1989ம் ஆண்டு மீண்டும் பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான புதுப்புது அர்த்தங்கள் படத்தில் நடித்தார்.அந்தப் படத்தில் இவர் பேசிய இன்னைக்கு செந்தா நாளைக்கு பால் என்ற வசனம் இன்று வரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவரை உச்சாணிக்கொம்பில் ஏற்றி விட்டது, பட்டி தொட்டி எங்கும் விவேக்கின் முகம் பரிச்சியமானது.நகைச்சுவைகள் ஊடாக நல்ல பல கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைத்த,இயற்கையின் நண்பன் விவேக் அவர்களது மறைவு  மிகவும் கவலையளிக்கிறது. அவருடைய நடிப்பு சிரிப்பு நகைச்சுவைகள் மறக்க முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.