பார்ப்போரை மிரள வைக்கும் 16 வயது பயங்கர ரௌடிகளின் அட்டகாசம்!! (வெளியான சிசிரிவி காணொளி..)

மருதானைப் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் குறித்து பொலிஸ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, கொலைவெறி கும்பலின் 2 இளைஞர்கள் கைது செய்யபட்டுள்ளனர். அண்மையில் முச்சக்கர வண்டியில் மோதிய 16 வயது சிறுவன் தலைமையிலான கும்பலால் இந்த தாக்குதல் ஏற்பட்டது.கடந்த 10ஆம் திகதி விபத்து சம்பவம் இடம்பெற்றது. 22 வயது இளைஞனின் முச்சக்கர வண்டியில் 16 வயது சிறுவன் மோதி விபத்திற்குள்ளானான்.சிறுவனின் தவறினாலேயே விபத்து நிகழ்ந்ததாக முச்சக்கரவண்டி சாரதி குறிப்பிட்டார். சிறுவன் தரப்பு அதை ஏற்கவில்லை.முச்சக்கர வண்டி மதானை, மொஹிதீன் மஸ்ஜித் மாவத்தையிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, கொட்டன், வாள் முதலிய ஆயுதங்களுடன் வந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியது.இதில், சாரதி படுகாயமடைந்தார்.முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்தனர்.22 வயதான முச்சக்கர வண்டி சாரதி தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

(206) මරදාන යුද පිටියක් කළ සිද්ධියේ – CCTV දර්ශන එළියට – YouTube