யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி..!

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் திறக்கப்படும் என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,


மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலினால் தனியார் கல்வி நிலையங்கள் முடக்கப்பட்டதுடன், திருமண நிகழ்வுகள், பொது நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் திங்கள் கிழமை தொடக்கம் முடக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களை திறப்பதற்கு மாகாண சுகாதார பிரிவு தீர்மானித்துள்ளது.

எனினும் மாவட்டத்தில் திருமண மண்டபஙகளில் திருமணம் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்தும் நீடிக்கும் எனவும் மாவட்ட செயலர் மேலும் கூறியுள்ளார்.