நீண்ட நாட்களின் பின்னர் வலுவடைந்த இலங்கை ரூபாயின் பெறுமதி

நீண்ட காலங்களின் பின்னர் இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.


அதற்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.28 ரூபாயாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது. அத்துடன் கொள்வனவு வலை 195.72 ரூபாயாக பதிவாகியுள்ளதென இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை வரலாற்றிலேயே முதல் முறையாக 204.62 ரூபாயாக அதிகரித்துள்ளது.

சீன அபிவிருத்தி வங்கி வழங்கிய 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் மூலம் இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.