தூக்கிலிட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞனின் சடலம்!! கிளிநொச்சியில் சோகம்..

கிளிநொச்சி – கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் கோணாவில் மத்தியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் வீட்டின் பின்பகுதியின் கூரையில் கயிற்றினால் தூக்கிட்டு கொண்டுள்ளதாக தெரியவருகிறது.கோணாவில் மத்தியைச் சேர்ந்த செல்வநாயகம் விதுசன் வயது 25 இவ்வாறு விபரீத முடிவை எடுத்துள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.கிளிநொச்சி மாவட்டத்தில் சமீப காலமாக தற்கொலைகள், அதிகரித்து வருகின்றதோடு குறிப்பாக, இளம் சமூகத்தினர் அதிகளவில் தற்கொலை செய்துகொள்கின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.எனவே நாட்டின் எதிர்கால தலைவர்களான இளம் சந்ததியினர் பிரச்சினைகளை கையாளக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதுடன்,மன விரக்தியான நிலை காணப்படுமாயின், நெருங்கியவர்ளோடு பிரச்சினைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.