இலங்கையை உலுப்பிய கோர விபத்துகள்..30 பேர் பலி!! 150 பேர் படுகாயம்..!!

இன்று அதிகாலை 06 மணியுடன் முடிவடைந்த 48 மணி நேரத்தில் விபத்துக்களினால் 30 பேர் உயிரிழந்ததுடன், 150 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 06 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேர காலகட்டத்தில் ஏற்பட்ட விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.பலியானவர்களில் 8 பேர் நேற்று ஏற்பட்ட விபத்துக்களில் மரணித்தவர்கள் என்றும், மீதமுள்ள எட்டு பேர் முன்னர் நிகழ்ந்த விபத்துக்களில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்தவர்கள் என்றும் அவர் கூறினார்.பலியானவர்களில் 12 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், 2 பயணிகள், 2 பாதசாரிகள் மற்றும் ஒரு சாரதி ஆகியோர் அடங்குகின்றனர்.கண்டகெட்டிய பகுதியில் ஏற்பட்ட விபத்தில் 14 பேர் காயமடைந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த சில வாரங்களாக வீதி விபத்துக்களில் கணிசமான அதிகரிப்பு இருப்பதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.