கெரோனாவையும் பொருட்படுத்தாமல் இலங்கையில் குட்டி லண்டனில் குவியும் சுற்றுலாப் பயணிகள்..!!

புத்தாண்டை முன்னிட்டு, நுவரெலியா நகருக்கு பெருந்திரளான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாக நுவரெலியா மாநகர மேயர் சந்தனலால் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இம்முறை புத்தாண்டு காலத்தில் கடந்த காலத்தை விட அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.இதன் காரணமாக தங்குமிடங்கள் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்துள்ளன. நுவரெலியாவுக்கு வரும் முன்னர் தங்குமிடங்கள் குறித்து அதிகமாக கவனம் செலுத்த வேண்டும்.நுவரெலியா நகருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை சுகாதார வழிக்காட்டல்களை பின்பற்றுமாறு நாங்கள் தொடர்ந்தும் அறிவுறுத்தி வருகின்றோம்.அதற்கான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளன எனவும் சந்தனலால் கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.