ஷீரடி பாபாவின் திருவருளைப் பெற 9 வியாழக்கிழமைகள் தொடர்ந்து இருக்க வேண்டிய விரதத்தின் விதிமுறைகள்…!

சீரடி சாய் பாபா பக்தர்கள் தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற பாபாவை வேண்டிக் கொண்டு ஒன்பது வியாழக்கிழமை சாயி விரதம் இருப்பார்கள். சாயின் 9 வியாழக்கிழமை விரதம் குறித்த விதி முறைகள்.

ஒன்பது வியாழக்கிழமைகள் பழ, திரவ உணவு மட்டுமே அருந்தி பாபாவுக்கு விரதம் இருக்க வேண்டும்.விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். இந்த விரதம் ஆண்,பெண்,குழந்தைகள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.எந்த காரியதிற்காக ஆரம்பிக்கிறோமோ,அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்தித்துக் கொள்ள வேண்டும். காலை அல்லது மாலை சாயி பாபாவின் திருவுருவத்திற்கு பூஜை செய்ய வேண்டும்.இந்த விரதத்தை திரவியஆகாரங்கள்(பால்,டீ,காபி,பழங்கள்,இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்யமுடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை(மதியமோ,இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.ஓரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சல் துணியை விரித்து சாயி பாபா படத்தை வைத்து தூய நீரால் துடைத்து சந்தனம் குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.மஞ்சள் நிறமலர்கள் மாலை சாயிபாபா படத்திற்கு அணிவித்து, தீபம், ஊதுபத்தி ஏற்றி , பிரசாதம் (பழங்கள், இனிப்புகள், கற்கண்டு எதுவானாலும்) நைவேத்தியம் வைத்து படைத்து, சாயி பாபாவை ஸ்மரணை செய்யவும்.முடிந்தால் சாயிபாபாவின் கோவிலுக்குச் செல்லலாம். வீட்டிலேயே சாயி பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யவும் சாயி விரத கதை, சாயி பாமாலை, சாயி பவானி இவற்றை பக்தியுடன் படிக்கவும். வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைபிடிக்கலாம்.