யாழ்.அரியாலை நாவலர் வீதியில் கோர விபத்து..8 வயதுச் சிறுவன் பரிதாபமாகப் பலி..!!

யாழ்.அரியாலை பகுதியில் நேற்றுக் காலை இடம்பெற்ற விபத்தில் 8 வயதான சிறுவன் உயிரிழந்துள்ளான்.

அரியாலை நாவலர் வீதியில் நேற்றுக் காலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த சிறுவனும் சகோதரரும் துவிச்சக்கர வண்டியில் பயணிக்கும்போது தவறிவிழுந்த நிலையில் அவ்வழியால் வந்த வாகனம் தலைமீது ஏறியதால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகின்றது.சம்பவத்தில் ஜெ.மதுசியன் (வயது8) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான். சம்பவத்தில் சிறுவனின் சகோதரன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.சிறுவனின் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு வாகன ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.