இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

இலங்கையில் மேலும் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 95 ஆயிரத்து 719 ஆக உயர்ந்துள்ளது.இதேவேளை இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் தொற்றில் இருந்து மேலும் 225 பேர் குணமடைந்துள்ளனர்.இந்நிலையில், தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து 151 ஆக உயர்ந்துள்ளது.