பொதுஜன பெரமுனவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ச?

2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் நாமல் ராஜபக்ச களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

பொதுஜன பெரமுனவின் பிரமுகர்கள் மட்டத்தில் தற்போது இது அதிகம் பேசப்படும் விடயமாகியுள்ளது.அண்மையில் கட்சி பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட மாட்டேன் எனக் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.சிறுபான்மையின மக்களின் வாக்குகளையும் பெறக்கூடிய வேட்பாளர் ஒருவரை கட்சி கண்டுபிடிக்க வேண்டுமென்றும் அவர் கூறயதாக தகவல் வெளியாகியிருந்தது.இதை தொடர்ந்து,பசில் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்ற ஊகங்கள் எழுந்திருந்த நிலையில், நாமல் ராஜபக்சவே களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து ராஜபக்ச குடும்பத்திற்குள் பேசப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.அண்மையில் நாமலை அழைத்த ஜனாதிபதி இது குறித்து நீண்டநேரம் கலந்துரையாடியாகவும், ஜனாதிபதி தேர்தலிற்கு நாமலை இப்பொழுதே தயாராகும்,ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் நாமலின் வெற்றிக்காக தான் உழைப்பதாகவும், ஜனாதிபதி கூறியதாக தகவல்.கோட்டாபய ராஜபக்ச அண்மையில் நியமித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராகவும் நாமலே நியமக்கப்பட்டிருந்ததும் குறிப்பித்தக்கது.