கடந்த மூன்று மாதங்களில் யாழிலிருந்து மட்டும் 1600 இளைஞர் யுவதிகள் இராணுவத்தில் இணைவு!!

யாழ்.மாவட்டத்திலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

தற்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண இளைய சமூகத்தின் பெரும் எண்ணிக்கையில் இராணுவத்தில் இணைவதானது, முப்படையினரின் அர்ப்பணிப்பான சேவைக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் எனவும் அவர் குறிப்பிட்டார்.