நீண்ட காலமாக சிறையிலிருந்தாலும் தனது விடாமுயற்சியினால் பட்டதாரியாக பரிணமித்துள்ள முன்னாள் உப பொலிஸ் பரிசோதகர்..!!

வெலிக்கடைச் சிறைச்சாலையில் மிக நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர் பட்டதாரியாக பரிணமித்துள்ளார்.சந்தன குருசிங்ஹ, என்ற கைதியே களனிப் பல்கலைக்கழகத்தில் சமூக விஞ்ஞான துறையில் பட்டத்தை பெறவுள்ளவராவார்.

சிறைச்சாலைக்குள் இருந்தவாறே, கல்வி பயின்று, சமூக விஞ்ஞான துறையில் பட்டம் பெற்ற இரண்டாவது நபராக இவர் விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை மொஹமட் ஷியாம் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் உப பொலிஸ் பரிசோதகரான இந்திக்க பமுனுசிங்ஹ என்ற நபரே, சிறைச்சாலைக்குள் இருந்தவாறு இதே துறையில் முதலாவது பட்டத்தை பெற்றவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.