புத்தாண்டு நெருங்கி வரும் நேரத்தில் இலங்கையர்களுக்கு கிடைத்த சோகமான செய்தி..!!

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது.இறுதியாக 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.