பொதுமக்களின் அசண்டையீனத்தால் இனிவரும் நாட்களில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகலாம்..!! இராணுவத் தளபதி எச்சரிக்கை!

சித்திரைப் புத்தாண்டு நாட்களில் மக்கள் சுகாதார நடைமுறைகளை மீறி செயற்பட்டால் மே மாதம் தொடக்கம் மிக மோசமான பெறுபேறுகளை மக்கள் சந்திக்க நேரும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார்.

நாட்டில் அபாயம் நிலவும் நிலையில், அரசாங்கம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அடிக்கடி எச்சரித்துவரும் நிலையில், எதனையும் மதிக்காமல் புத்தாண்டுக்கு பொருட்கள் வாங்க முண்டியடிக்கும் மக்களால் கவலையடைகிறேன்.மக்கள் இவ்வாறுதான் தொடர்ந்தும் செயற்படபோகிறார்கள் என்றால், வேறு எந்த பண்டிகையையும் கொண்டாட முடியாத நிலை நிச்சயம் ஏற்படும்.எனவும் மே மாதத்தில் இன்றைய செயற்பாடுகளுக்கான பெறுபேறு கிடைக்கும் எனவும் இராணுவத் தளபதி எச்சரித்துள்ளார்.