இலங்கையின் சுங்க உதவி கண்காணிப்பாளர் ஒருவர் கைது

இலங்கையின் சுங்க உதவி கண்காணிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்தோனேசியாவின் பாக்குகளை இலங்கை அரசாங்கத்தின் பாக்குகளாக காட்டி இந்தியாவுக்கு மீள் ஏற்றுமதி செய்வதற்கான தவறான தரவு உள்ளீட்டில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


அவரை குற்றவியல் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.இந்த சுங்க அதிகாரி வாதுவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.