பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பில் பெரும்தொகையான ஐஸ்போதைப்பொருளுடன் பெண்கள் உட்பட ஆறு பேர் அதிரடியாகக் கைது..!!

கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல நிவான்கடம பிரதேசத்தில் 13 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் விற்பனையை தடுக்க நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் தேடுதலின் பயனாக இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.அதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களுடன் சம்பந்தம் இருக்கின்றதா என்பதை அறிய, பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.