யாழ்.நகர் பிரபல வங்கியின் முன்பாக பட்டப் பகலில் நடந்த பயங்கரத் திருட்டு!! ஐந்து லட்சம் ரூபாவுடன் மாயமான திருடன்..!!

யாழ்.நகரில் வங்கியின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.யாழ்.நகரில் ஸ்ரான்லி வீதியில் உள்ள வங்கி ஒன்றில் பணம் வைப்பிலிடுவதற்காக சென்றபோது குறித்த பணம் திருட்டு போயுள்ளது. நபர் ஒருவர் தனது வெகோ மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு கீழ் உள்ள களஞ்சிய பெட்டிக்குள் 5 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து பூட்டி, வங்கியின் முன்னால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வங்கிக்குள் சென்று தனது தேவையை நிறைவேற்றியுள்ளார்.பின்னர், அவர் மற்றொரு வங்கிக்கு சென்று 5 லட்சம் ரூபாய் பணத்தை வைப்பிலிடுவதற்காக களஞ்சிய பெட்டியை திறந்தபோது. அங்கிருந்த பணம் காணாமல்போயுள்ளது.

இதனையடுத்து. உடனடியாக முன்னர் சென்றுவந்த வங்கிக்கு திரும்பி வந்து அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சீ.சி.ரி.வி கமராவை சோதனை செய்துள்ளார்.அதில். தொலைபேசியில் உரையாடியபடி இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளின் களஞ்சிய பெட்டியிலிருந்து பணத்தை திருடுவது பதிவாகியுள்ளது.இதனையடுத்து அந்த சீ.சி.ரி.வி கமரா பதிவுகளுடன், குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.