இலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள குள்ளமனிதர்கள்!! பல இடங்களிலும் அச்சத்தில் பொதுமக்கள்..!!

கடந்த காலங்களில் இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பரபரப்பை ஏற்படுத்திய குள்ள மனிதர்கள் தொடர்பில் மீண்டும் செய்தி வெளிவர ஆரம்பித்துள்ளது.

பதுளை, இரண்டாம் கட்டை, நெத்ராகம பிரதேசத்தில் கிராமத்திலேயே மீண்டும் குள்ள மனிதர்களின் நடமாட்டம் ஆரம்பித்துள்ளது.மாத்தறை, தெட்டமுன மீனவ கிராமத்தில் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியது.அத்துடன் குளியாப்பிட்டிய, எலதலவ மற்றும் முனமுல்தெனிய ஆகிய பிரதேசங்களிலும், அநுராதபுரம் – மஹவிலச்சிய, எந்தகல்ல ஆகிய பிரதேசங்களிலும் அம்பாறை – தமன – தொட்டம பிரதேசங்களிலும் இதற்கு முன்னர் குள்ள மனிதர்கள் தொடர்பில் தகவல் வெளியாகியது.அவ்வாறான சூழலில் பதுளை – இரண்டாம் கட்டை – நெத்ராகம பிரதேசத்தில் குள்ள மனிதர்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாக தாங்கள் அச்சத்தில் இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.பிரதேசங்களில் தோன்றும் குள்ள மனிதர்கள் பெண்களை துரத்துவதாகவும், அச்சுறுத்துவதாகவும் பல தகவல்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.