வடக்கில் இன்று மட்டும் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

வடமாகாணத்தில் இன்று மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கிளிநொச்சி தனிமைப்படுத்தல் மையத்தை சேர்ந்த 3 பேருக்கும் தொற்று உறுதியானது.இன்று வட மாகாணத்தில் 417 பேரின் பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில், யாழ் மாவட்டத்தில் 5 பேர், கிளிநொச்சி மாவட்டம் -3(தனிமைப்படுத்தல் மையம்), வவுனியா மாவட்டத்தில் ஒருவர், மன்னார் மாவட்டத்தில் 2 பேர் தொற்றிற்குள்ளாகியுள்ளனர்.
முன்னதாக யாழ் மாவட்டத்தில் 34 பேர் தொற்றிற்குள்ளாகியிருந்தனர். இதன்படி, வடமாகாணத்தில் இன்று 42 பேருக்கு தொற்று உறுதியானது.