தற்போது கிடைத்த விசேட செய்தி..யாழில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ்ப்பாணத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் இரண்டிலும் 640 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.18 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் யாழ்ப்பாணத்தில் 17 பேரும் கிளிநொச்சியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்கள். மற்றைய ஒருவர் யாழ்ப்பாணம் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பணியாற்றுபவர்.யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்ற இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் சேர்க்கப்பட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தப்பட்டவர்கள்.சங்கானை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சைக்குச் சென்ற இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.