இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு..!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 19 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்நிலையில், கொரோனா தொற்றிலிருந்து 136 குணமடைந்துள்ளதாகவும், 506 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையில் தற்போது கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இல்லை என சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.