50 வருட கால கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் பாக்குநீரிணையைக் கடக்க இந்தியாவை நோக்கி நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கை வீரர்!!

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர பாக்கு நீரிணையை கடப்பதற்கான பயணத்தை இன்று அதிகாலை தலைமன்னாரில் இருந்து ஆரம்பித்துள்ளார்.


இலங்கையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவரின் 50 வருடங்கள் பழமையான கின்னஸ் சாதனையை முறியடிக்கும் நோக்கில் இலங்கை விமானப் படையைச் சேர்ந்த நீச்சல் வீரர் ரோசன் அபேசுந்தர நீச்சல் பயணத்தை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.இன்று அதிகாலை 2 மணியளவில் தலைமன்னார் இறங்கு துறையில் இருந்து பாக்கு நீரிணையை நோக்கி தனது பயணத்தை ஆரம்பித்துள்ள குறித்த விமானப்படை வீரர் தனுஸ் கோடியை சென்றடைவார். பின்னர் அங்கிருந்து மீண்டும் தலைமன்னார் நோக்கி வருகை தர உள்ளார்.குறித்த வீரர் நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மீண்டும் தலைமன்னாரை வந்தடைவார் என தெரிவிக்கப்படுகின்றது.