ஊரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று முன்னர் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு…!!

நாளை முதல் நாடு முழுவது ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை இரவு 8 மணி முதல் மே மாதம் 4ம் திகதி காலை 5 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களில் அதிகாலை 5.00 மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஊரடங்குச் சட்டம் வார நாட்களில் தளர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.எனினும், நாளை இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது.