யாழில் 70 வர்த்தக நிறுவனங்களுக்கு அதிரடி சீல்!

இலங்கையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்கியது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 600-ஐ நெருங்கி வருகிறது.

இலங்கையின் யாழ்ப்பாணம் மாநகரத்தில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அவற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று ஏற்பட்ட 70 வர்த்தக நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றுக்கு யாழ்ப்பாண சுகாதார மருத்துவக் குழுவினர் சீல் வைத்தனர்.

இவை தவிர்த்து, சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஏனைய வர்த்தக நிறுவனங்களை திறக்க அனுமதி அளித்தது.

மேலும், யாழ்ப்பாணம் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. இத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.