சற்று முன் கிடைத்த விசேட செய்தி..பிணையில் விடுதலையானார் மணிவண்ணன்!!

யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் சற்றுமுன்னர் யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், அவருக்கு யாழ். நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முதலாம் இணைப்பு:யாழ்.மாநகரசபையின் முதல்வர் வி.மணிவண்ணன் தற்போது யாழ்.நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வி.மணிவண்ணன் நீதிவானின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.செய்திகள் தெரிவிக்கின்றன.இவ்வழக்கு பொதுச்சட்டமான தண்டனைச் சட்டக்கோவையின் 120ம் பிரிவின் கீழ் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தவதை ஆதாரமாக கொண்டு தாக்கல் செய்யப்படுமாக இருந்தால் சந்தேகநபரிற்கு பிணை வழங்கும் அதிகாரம் நீதமன்றத்திற்கு உண்டு.ஆனால், பொலிஸ் பேச்சாளருடைய கருத்தின் படி பயங்கர வாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுமாக இருந்தால், நீதிமன்றத்திற்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை, சட்டமா அதிபர் பிணை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில்,நீதிமன்றம் பிணை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.பயங்கரவாத தடைச் சட்டத்தில் விசாரணை செய்வதாக இருந்தால் மூன்று நாட்களிற்கு (72 மணித்தியாலம்) பொலிஸ் தடுப்பில் வைத்த விசாரணை செய்ய முடியும், 72 மணித்தியாலத்திற்கு மேலதிகமாக விசாரணை செய்யப்பட வேண்டுமாயின், பாதுகாப்பு அமைச்சின் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று விசாரணையை தொடர முடியும்.

ஆனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள யாழ்.மேயர் 24 மணித்தியாலங்களுக்குள் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தபடுவதனால் அது பெரும்பாலும் பொதுச்சட்டமான தண்டனைச் சட்டக்கோவை 120 பிரின் கீழ் ஆஜர்ப்படுத்தப்படலாம், அவ்வாறு ஆஜர்படுத்தப்படுமாக இருந்தால் நீதிமன்றம் தனக்குரிய தத்துனிவு அதிகாரத்தின் மூலம் பிணை வழங்குவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை,முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தண்டனைச் சட்டக்கோவை 120 பிரின் கீழ் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானமையும் குறிப்பிடத்தக்கது.