அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ஓர் மகிழ்ச்சியான செய்தி..புத்தாண்டிற்கு விசேட விடுமுறை..!!

இலங்கையில் தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி திங்கட்கிழமையை விசேட அரச விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை பொது நிர்வாக அமைச்சு இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டுக்கது.தமிழ், சிங்களப் புத்தாண்டு எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 13, 14ஆம் திகதிகளான செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் விடுமுறை நாட்களாகவுள்ளதால், அதற்கு இடைப்பட்ட திங்கட்கிழமைக்கும் அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, நாட்டில் கொரோனா நெருக்கடி நிலையைக் கருத்திற்கொண்டு எதிர்வரும் பண்டிகைக் காலத்தை மக்கள் கடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.